Type Here to Get Search Results !

பென்னாகரம் தொகுதியில் புதிய பேருந்து சேவைகள் இயக்க கோரி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. கஜேந்திரன் கோரிக்கை.


தருமபுரி, ஆகஸ்ட் 6:


பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய அரசு பேருந்து சேவைகளை இயக்க வேண்டும் என பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.


கடந்த ஜூலை 30-ஆம் தேதி அனுப்பப்பட்ட அந்த மனுவில், தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் போக்குவரத்து சிரமங்களை சுட்டிக்காட்டி, புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மனுவில் இடம்பெற்ற முக்கிய கோரிக்கைகள்:

  • ஏரியூர் – மேச்சேரி இடையே நேரடி புதிய அரசு பேருந்து சேவையை இயக்க வேண்டும்.
  • பென்னாகரம் – தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழியாக செல்லும் புதிய பேருந்து சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.
  • பென்னாகரம் முதல் மாமரத்துப்பள்ளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை மாணவர்களின் கல்வி தேவைக்காக புதிய பேருந்து சேவையை இயக்க வேண்டும்.
  • பாப்பாரப்பட்டி முதல் பிக்கிலி வரை புதிய அரசு பேருந்து சேவையை தொடங்க வேண்டும்.


மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தினசரி பயணிகள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்த புதிய பேருந்து சேவைகளை உடனடியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies