தருமபுரி, ஆகஸ்ட் 25:
தருமபுரி குமாரசாமிப்பேட்டை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில், திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 120வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் பின்புறம் உள்ள தட்சிணாமூர்த்தி மடத்தெருவில் நடைபெற்ற விழாவிற்கு அறக்கட்டளைத் தலைவர் ஆர். மோகன்குமார் தலைமை வகித்தார். செயலாளர் கே. ஸ்ரீதர் வரவேற்றார்.
பொருளாளர் மணிவண்ணன், ஊர் பிரமுகர்கள் குமார், வேலாயுதம், மோகன், சதாசிவம், சண்முகம், டி.ஜி. மணி, அன்பு, மணிவண்ணன், செல்வமணி, அறக்கட்டளை நிர்வாகிகள் கணேஷ், சரவணன் மற்றும் நகராட்சி கவுன்சிலர் பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவுருவப் படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பொதுமக்களுக்கு அன்னதானம்
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் சந்தோஷ் மற்றும் சிவா ஆகியோர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் இம்பா அமைப்பின் மாநில செயலாளர் சரவணன், நிர்வாகிகள் உதயபானு, தவமணி, சேகர், பாபு, சோமசுந்தரம், பழனிசாமி, பூங்குன்றம், கண்ணன், பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, அன்னதானத்தில் பங்கேற்றனர். ஆன்மிகம் மற்றும் மனிதநேயத்தை முன்னிறுத்தி நடைபெற்ற இவ்விழா, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.
.gif)

.jpg)