Type Here to Get Search Results !

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் எப்படி? நேரில் களமிறங்கிய தருமபுரி ஆட்சியர்!


நல்லம்பள்ளி, ஆக. 13:


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்திற்குட்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மாவட்ட ஆட்சியர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.08.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


அதியமான் கோட்டை ஊராட்சி அவ்வை நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, டொக்குபோதனஅள்ளி ஊராட்சி பூவல் மடுவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொடாரன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மானியதஅள்ளி ஊராட்சி அஜ்ஜப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் மேல்பூருக்கல் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றது.


ஆய்வின்போது பள்ளிகளின் வகுப்பறை கட்டிடங்களின் பராமரிப்பு, குடிநீர், மின்சாரம், கழிவறைகள், மதிய உணவுக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, கண்டறியப்படும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், பள்ளி வளாகங்களை சுத்தமாகவும் தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், முட்டை வழங்கப்படுவது, குடிநீர், மின்சாரம் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.


இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு. மோகனசுந்தரம், உதவி செயற்பொறியாளர் திரு. மகேஷ்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies