தருமபுரி, ஆகஸ்ட் 12:
தருமபுரி மாவட்டம், பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு டிப்ளமோ மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், தேவையான அனைத்து சான்றிதழ்கள் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் கல்லூரிக்கு நேரில் சென்று, அங்குள்ள உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நேரடியாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு கட்டணமாக ரூ.150-ஐ வங்கிக் கணக்கு மூலம் செலுத்த வேண்டும். SC/ST பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்பப் பதிவு கட்டணம் இல்லை.
முக்கிய தேதி
இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 31.08.2026 மாலை 5.00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு உதவித்தொகைகள் பெற்றுத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்களின் வசதிக்காக இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
எனவே, டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் தகுதியான மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
.gif)

.jpg)