Type Here to Get Search Results !

தருமபுரியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.


தருமபுரி, ஜூலை 15:


கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, உதவும் உறவுகள் பவுண்டேஷன் மற்றும் பிரைம் க்ரோ சீட்ஸ் இணைந்து, தருமபுரி ரோட்டரி மஹாலில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தின.


விழாவில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கர்மவீரர் காமராஜரின் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்நிகழ்வில் பிரைம் க்ரோ சீட்ஸ் நிர்வாக இயக்குநர் முத்துக்குமாரசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி, பாமக மாநில துணைத் தலைவர் சண்முகம், காமராஜ், முருகன், முருகசாமி, தமிழ்நாடு தூய்மை பணியாளர் மற்றும் டேங்க் ஆபரேட்டர் சங்க மாநிலத் தலைவர் கிருஷ்ணன், சமூக செயல்பாட்டாளர் புகழேந்தி, கிராம விழிகள் அறக்கட்டளை தலைவர் வெங்கடாசலம், ஆச்சி மசாலா மேலாளர் சிவா, ஐஸ்வர்யா ஃபுட் ப்ராடக்ட்ஸ் நிர்வாக இயக்குநர் சாமிநாதன், பேராசிரியர் முனைவர் முனிவேல், தொழிலதிபர் பாரதி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் ரகுநாதன், DKJ சரடு மண்டி நிர்வாக இயக்குநர் லட்சுமி நாராயணன், தருமபுரி ராகமளிகா மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


மேலும், தமிழ்நாடு டேங்க் ஆபரேட்டர் மற்றும் தூய்மை பணியாளர் சங்கத்தின் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியை கவியரசி தொகுத்து வழங்க, இறுதியில் உதவும் உறவுகள் பவுண்டேஷன் தலைவர் ராமன் நன்றி கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies