தருமபுரி, ஜூலை 21:
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட தருமபுரி சாலையில் அமைந்துள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத் தொட்டியில் இருந்து அப்பகுதி மக்கள் குடிநீர் பெற்று வருகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக தொட்டியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த இரண்டு குழாய்களும் பழுதடைந்ததால், குடிநீர் தொடர்ந்து வீணாகி வந்ததாக தெரிவித்தனர். தண்ணீர் வீணாவதைத் தடுக்க, அப்பகுதி மக்கள் தற்காலிகமாக மரக்கட்டைகளை குழாய்களில் செருகி வைத்து, தேவைப்படும் நேரங்களில் அவற்றை அகற்றி தண்ணீர் பிடித்து வந்ததாகவும் கூறினர்.
தற்போது அந்த மரக்கட்டைகள் முழுமையாக உள்ளே சிக்கியதால் அவற்றை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்றி குடிநீர் தொட்டியின் மேற்பகுதியில் பச்சை நிற குழாய் அமைத்து, அதன் மூலம் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த நிலை காரணமாக குடிநீர் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு வருவதுடன், பாதுகாப்பு மற்றும் சுகாதார ரீதியாகவும் அச்சம் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பொ.மல்லாபுரம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த குழாய்களை அகற்றி, தரமான புதிய குடிநீர் குழாய்களை பொருத்தி, பொதுமக்கள் சிரமமின்றி குடிநீர் பெறும் வகையில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)