Type Here to Get Search Results !

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தருமபுரி, ஜூலை 21:


தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்டக் கிளை சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்டச் செயலாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினர். மாவட்ட துணைத் தலைவர்கள் கோவிந்தரசு, துரைராசு, போராட்டக் குழுத் தலைவர் ஸ்டாலின் மணிகுமார், போராட்டக் குழுச் செயலாளர் ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில், நியாயவிலை கடைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தாயுமானவர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பெரும்பாலான நியாயவிலை கடைகளில் மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர் விற்பனையாளர்களாக பணியாற்றி வருவதால், இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கூடுதல் பணிகளில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.


மேலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்குப் பதிலாக, ஒன்றிய அளவில் பயனாளிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு அரசு சார்பில் வாகன வசதி மற்றும் தனிப்பட்ட பணியாளர்களை நியமித்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகையை ரூ.1,000 உயர்த்தி, மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு இணையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பணியாளர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies