தருமபுரி, ஜூலை 15:
கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, மை தருமபுரி அமைப்பின் சார்பில் தருமபுரி மாவட்டம் ஏ.கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மதிய உணவு சாப்பிடுவதற்கான தட்டுகள் வழங்கப்பட்டன.
'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்' என்ற உயரிய சிந்தனையுடன் கிராமம் தோறும் பள்ளிகளை அமைத்து, ஏழை எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய கர்மவீரர் காமராஜரின் கல்விச் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிரேகா தலைமை தாங்கினார். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், கணேஷ், ஜெயபிரகாஷ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.
மேலும், கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, கல்விக்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் மற்றும் மாணவர்கள் அவரை முன்மாதிரியாகக் கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.
.gif)

.jpg)