தருமபுரி, ஜூலை 14:
தருமபுரி வெண்ணாம்பட்டி அருகே நியூ காலனியில், தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம் சார்பில், புத்த தம்ம மானுட மீட்பு அறக்கட்டளை, ஒன் ஹெல்த் மருத்துவமனை மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து பொதுமக்களுக்கான இலவச நுரையீரல் மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்தினர்.
இந்த மருத்துவ முகாமை சங்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அமரசாக்கியன் தலைமையில், தம்ம பேராயர் தலைவர் தம்மசுடர் தொடங்கி வைத்தார். முகாமில் ஒன் ஹெல்த் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் திருப்பதிராஜா மற்றும் வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் சுரேஷ் ஆகியோர் பொதுமக்களுக்கு நுரையீரல் மற்றும் பொது உடல்நல பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவச மருந்துகளை வழங்கினர்.
இந்த முகாமில் தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம் மற்றும் புத்த தம்ம மானுட மீட்பு அறக்கட்டளையின் நிர்வாகிகள் கமலேசன், ரவிச்சந்திரன், யோகா மாஸ்டர் பார்த்தசாரதி, டாக்டர் ஆனந்தசெல்வம், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
.gif)

.jpg)