பென்னாகரம், ஜூலை 15:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட அரசு முகாமை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை தருமபுரி (பொறுப்பு – பாலக்கோடு) நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் நாகராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பென்னாகரம் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய பேரணி, வட்டார வளர்ச்சி அலுவலக சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது. தொடர்ந்து கரியம்பட்டி, கொட்டாவூர், சின்னம்பள்ளி, பெரும்பாலை மற்றும் பழையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டன.
பேரணியின் போது, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தரமான தலைக்கவசம் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உதவி கோட்டப் பொறியாளர் அருள்செல்வன், கோட்டப் பொறியாளர் சிங்காரவேலன், சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மற்றும் பென்னாகரம்
.gif)

.jpg)