தருமபுரி, ஜூலை 10:
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 17.07.2026 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த இலவச வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளர்களை நேரடியாக தேர்வு செய்து வருகின்றன. இம்முகாமில் பங்கேற்று தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளதாக தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள வேலைதேடுவோர் அனைவரும் 17.07.2026 அன்று காலை 10.00 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
.gif)

.jpg)