Type Here to Get Search Results !

பீடி, சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு.


தருமபுரி, ஜூலை 10:


இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 2026–27 நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் One Time Registration (OTR) முறையில் மட்டுமே ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தங்களது பெயரில் சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும், ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்கு மாணவர்கள் மின்னணு முறையில் ஒப்புதல் வழங்குவதும் கட்டாயமாகும்.


இத்திட்டத்தில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும். தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் இதுவரை பதிவு செய்யாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முதலில் பதிவு செய்து, பின்னர் மாணவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய முறையில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31.08.2026 என்றும், உயர்கல்வி மற்றும் தொழில்முறை படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு 31.10.2026 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க. தொழில் பூங்கா, கிண்டி, சென்னை – 600032, மின்னஞ்சல்: wclwo.chn-mole@gov.in, தொலைபேசி: 044-29530169 ஆகியவற்றை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies