Type Here to Get Search Results !

தருமபுரியில் ஜூலை 20-ல் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, ஜூலை 17:


தருமபுரி மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (Apprenticeship) சேர்க்கை முகாம் வரும் 20.07.2026 அன்று தருமபுரி (கடகத்தூர்) அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


இந்த முகாமில் அரசு, பொதுத்துறை மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தொழிற்பழகுநர் சட்டம், 1961-ன் கீழ் நேர்காணல் மூலம் தொழிற்பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளன. ஐ.டி.ஐ. முடித்தவர்கள் மட்டுமின்றி, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பி.இ., பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம். உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும் தங்களது கல்வித் தகுதிக்கேற்ப பயிற்சியில் சேரலாம்.


பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வயது வரம்பில் கூடுதலாக ஓராண்டு சலுகை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். மேலும், பயிற்சியின்போது மாதந்தோறும் ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை உதவித்தொகை நிறுவனங்களால் வழங்கப்படும்.


எனவே, தகுதியுள்ள இளைஞர்கள் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் அணுகவோ அல்லது 94422 86874, 94999 37454, 63835 64479 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies