Type Here to Get Search Results !

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க வனத்துறை வேண்டுகோள்.


தருமபுரி, ஜூலை 19:


தருமபுரி மாவட்ட வனத்துறை சார்பில், நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பாப்பம்பாடி கிராமம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் (தந்தை: ராமசாமி) என்பவர், தருமபுரி வனச்சரக STOR குற்ற வழக்கு எண்: 1/2012 (31.03.2012) தொடர்பாக நீதிமன்றத்தால் தேடப்பட்டு வருகிறார்.


இந்த வழக்கு 1882-ம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டம், அதன் தொடர்புடைய சட்டப்பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு திருத்திய வனச்சட்டம், 1970-ன் கீழ் பதிவு செய்யப்பட்டதாகவும், தற்போது தருமபுரி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2-ல் சி.சி. எண் 71/2015 ஆக விசாரணையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், தருமபுரி வனச்சரக அலுவலகம் அல்லது தொடர்புடைய வன அலுவலர்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


தொடர்பு எண்கள்:

  • தருமபுரி வனச்சரக அலுவலகம் – 89259 31540
  • வனவர், பரிகம் பிரிவு – 89259 32308
  • வனக்காப்பாளர், பரிகம் வடக்கு வனக் காவல் சுற்று – 89259 32357

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies