Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் 5-வது ஒன்றிய மாநாடு; புதிய நிர்வாகிகள் தேர்வு.


பென்னாகரம், ஜூலை 19:


அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பென்னாகரம் ஒன்றிய 5-வது மாநாடு, பென்னாகரம் அருகே கூத்தப்பாடி கிராமத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவர் ஜி. நாகராணி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் என்.பி. முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.


மாவட்டத் தலைவர் பி. ரவி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆ. ஜீவானந்தம், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே. அன்பு, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர். சரண்யா உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியத் தலைவராக ஜி. நாகராணி, செயலாளராக மா. தேவன், பொருளாளராக எஸ். பெருமாள் ஆகியோர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, மாவட்டச் செயலாளர் எம். முத்து நிறைவுரையாற்றினார்.


மாநாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், அதற்கான தினக்கூலியை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும், நிலமற்ற விவசாயிகளுக்கு விவசாய நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies