தருமபுரி, ஜூலை 21:
முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் வழங்கப்படும் தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப நடைமுறையில் 2026–2027 கல்வியாண்டு முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறையின்படி, 2025–2026 கல்வியாண்டை நிறைவு செய்த மாணவர்கள், ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை முன்னாள் படைவீரர் நலத்துறையின் www.exwel.tn.gov.in இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ்-2 வரை பள்ளிக் கல்வியைத் தவிர, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது கைம்பெண்களின் பிள்ளைகள், முதல் ஆண்டு படிப்பை முடித்து இரண்டாம் ஆண்டு பயிலும் போதுதான் முதல் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையை கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக கல்வி நிறுவனத்தின் Bonafide சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்கள், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் (Consolidated/Final Year Mark Sheet) மற்றும் படிப்பு நிறைவு சான்றிதழ் (Course Completion Certificate) ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
.gif)

.jpg)