Type Here to Get Search Results !

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய பள்ளி ஆசிரியர்.




தருமபுரி, ஜூன் 10:


புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூந்தல் தானம் வழங்கிய நிகழ்வு பாராட்டுகளை பெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் மை தருமபுரி அமைப்பு சார்பில் பல்வேறு மனிதநேய சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு இரத்த தானம், தட்டணுக்கள் தானம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


மேலும், புற்றுநோய் சிகிச்சை காரணமாக தலைமுடியை இழக்கும் குழந்தைகளுக்கு செயற்கை முடி தயாரிக்க தேவையான கூந்தல் தானம் குறித்த விழிப்புணர்வையும் மை தருமபுரி அமைப்பினர் ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தருமபுரி காந்தி நகரில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சிந்து வெங்கடாசலம், புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக தனது கூந்தலை தானமாக வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மற்றும் வழக்கறிஞர் சுபாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் கணேஷ் மற்றும் மோனிஷா ஆகியோர் கூந்தல் தானத்தை பெற்றுக்கொண்டனர். புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் கூந்தல் தானம் வழங்கிய ஆசிரியர் சிந்து வெங்கடாசலத்திற்கு மை தருமபுரி அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies