தருமபுரி, ஜூன் 17:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பைசுஅள்ளி ஊராட்சியின் குண்டலஅள்ளி பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். குண்டலஅள்ளி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜா தலைமையில் பலர், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலப் பணிகளில் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இணைப்பு நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழக மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான சிவன் முன்னிலையில் நடைபெற்றது. புதிய உறுப்பினர்களை வரவேற்று கட்சியின் உறுப்பினர் அடையாளங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் வீரமணி, காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், செயற்குழு உறுப்பினர்கள் மூர்த்தி, சகாதேவன், இளங்கோ, மாவட்ட விவசாய அணி செயலாளர் மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி தினேஷ்ராஜா, விமல்ராஜ் உள்ளிட்ட ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கட்சி நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் மத்தியில் கட்சியின் கொள்கைகளை கொண்டு சேர்ப்பதற்கும் புதிய உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மாற்றுக் கட்சிகளில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் |
.gif)

.jpg)