Type Here to Get Search Results !

வத்தல்மலை மகாத்மா காந்தி மாலை நேர பயிலக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய மை தருமபுரி அமைப்பு.


தருமபுரி, ஜூன் 6:


தருமபுரி மாவட்டத்தில் எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் சார்பில் மலை கிராம மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மகாத்மா காந்தி மாலை நேர பயிலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வத்தல்மலையில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி மாலை நேர பயிலக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் புத்தகப் பைகள், நோட்டுப் புத்தகங்கள், பேனா, டிபன் பாக்ஸ் மற்றும் வாட்டர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தருமபுரியைச் சேர்ந்த வினோத், தற்போது பெங்களூருவில் ஆர்க்கிடெக்ட்டாக பணியாற்றி வருகிறார். அவரது நிதியுதவியுடன் இந்த கல்வியாண்டிற்கான கல்வி உபகரணங்கள் வத்தல்மலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனர் ஜெ. பிரபாகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், மாருதி இரத்த வங்கி வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.


மேலும், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், கணேஷ், ஆசிரியர்கள் பிரேமா, வெற்றி, ரோடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கவிதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


மலைப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவது பாராட்டுக்குரியது என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies