Type Here to Get Search Results !

கும்மனூரில் அரசு வேளாண்மை பட்டயக் கல்லூரியை மீண்டும் தொடங்க வலியுறுத்தி அமைச்சர் ஆர். வினோத்திடம் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மனு.


தருமபுரி, ஜூன் 25:


சென்னையில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வினோத்தை, முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.


அந்த மனுவில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கும்மனூர் ஊராட்சியில் அரசு வேளாண்மை பட்டயக் கல்லூரி அமைப்பதற்காக சுமார் 97 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருந்ததாகவும், அங்கு டிப்ளமோ இன் அகரிகல்ச்சர் (Diploma in Agriculture) மற்றும் டிப்ளமோ இன் ஹார்டிகல்ச்சர் (Diploma in Horticulture) படிப்புகளை வழங்கும் அரசு பட்டயக் கல்லூரி அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால், பின்னர் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டதால், அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி கும்மனூரில் அரசு வேளாண்மை பட்டயக் கல்லூரியை தொடங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஆர். வினோத்திடம் கே.பி. அன்பழகன் வலியுறுத்தினார்.


இந்த சந்திப்பின் போது பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல், முன்னாள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் பொன்னுவேல், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் கொள்ளுபட்டி மாது, பாலக்கோடு வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜா, காரிமங்கலம் இளைஞர் பாசறை நகர செயலாளர் பிரேம் குமார், தருமபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் வெற்றிவேலன், பாலக்கோடு வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை துணைச் செயலாளர் வேலன் மற்றும் கட்சி நிர்வாகி சௌந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies