Type Here to Get Search Results !

தருமபுரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


தருமபுரி, ஜூன் 25:


தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே. அருண் கபிலன் தலைமையில் நடைபெற்றது.


அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பிருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரணி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலிருந்து புறப்பட்டு, நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று நான்கு ரோடு, ரோட்டரி பகுதியில் நிறைவடைந்தது.


பேரணியில் பங்கேற்ற மாணவிகள், போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியதுடன், "போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம்", "இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம்", "போதைப்பொருளை ஒழிப்போம்" உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் எதிர்கால வாழ்க்கையை கடுமையாக பாதிப்பதாகக் குறிப்பிட்டார். மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருந்து, சமூகத்திலும் இதுகுறித்த விழிப்புணர்வை பரப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.


மேலும், போதைப்பொருள் விற்பனை அல்லது பயன்பாடு தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியின் நிறைவில், போதை இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies