தருமபுரி, ஜூன் 30:
தருமபுரி நகராட்சியின் 29-ஆவது வார்டு, சூடாமணி தெருவில் பல ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த லட்சுமி, இன்று (30.06.2026) பணிஓய்வு பெற்றார். இதையொட்டி, சூடாமணி தெரு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அவருக்கு பிரியாவிடை மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் பாலமுரளி தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், பொருளாளர் சுந்தரம், சங்க உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் திரளாக கலந்து கொண்டு, லட்சுமியின் அர்ப்பணிப்புமிக்க சேவையை பாராட்டினர்.
விழாவில், லட்சுமிக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கி, நினைவுப் பரிசு அளித்து கௌரவித்தனர். பல ஆண்டுகளாக சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்கும் பணியில் அவர் ஆற்றிய பங்களிப்பை பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர். மேலும், அவரது பணிக்காலம் முழுவதும் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக நன்றி தெரிவித்து, பணிஓய்வுக்குப் பிறகும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வு அமைய பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
.gif)

.jpg)