Type Here to Get Search Results !

தருமபுரி அருகே கஞ்சா விற்பனை: 4 பேர் கைது, 3 கிலோ கஞ்சா பறிமுதல்.


தருமபுரி, ஜூன் 6:


தருமபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தருமபுரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.


அப்போது, ஹரிஹரன், சிவசக்தி, கார்த்திக் மற்றும் அபுபார்க்கர் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சக்திகுமாரன் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கஞ்சா எவ்வாறு பெறப்பட்டது, வேறு யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து தருமபுரி நகர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies