Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா: 64 மனுக்களுக்கு உடனடி தீர்வு.


தருமபுரி, ஜூன் 17:


தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் பெட்டிஷன் மேளா (குறைதீர்க்கும் முகாம்) இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. A.K. அருண் கபிலன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (17.06.2026) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை வழங்கினர்.


இந்த முகாமில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பெட்டிஷன் மேளாவின் போது பொதுமக்களால் வழங்கப்பட்ட 64 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 64 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இன்றைய முகாமில் புதிதாக 27 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்து தீர்வு பெறும் வகையில் இத்தகைய பெட்டிஷன் மேளாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843663662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies