Type Here to Get Search Results !

லாரி ஓட்டுநர்களிடம் மாமூல் வசூல் புகார் எதிரொலி; 3 காவலர்கள் பணியிடை நீக்கம் - மாவட்ட காவல்துறை விளக்கம்.


தருமபுரி, மே.16:


தருமபுரி மாவட்டம் தொப்பூர் முதல் ஓமலூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநர்களிடம் மாமூல் வசூல் நடைபெறுவதாக தனியார் செய்தி தொலைக்காட்சியில் வெளியான காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே, நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் சாலையில் செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான காணொளி தனியார் செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தருமபுரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையின் அடிப்படையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும், இரண்டு தலைமை காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies