அரூர், மே.21:
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பொய்யப்பட்டி கிராமத்தில் தருமபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் குறை நீக்குதல் அறுவை சிகிச்சை முகாமை நடத்தின. மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சரும், கழகப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் நல்லாசியுடன் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
முகாமில் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 125 பயனாளிகள் மேல்சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவர் கலையரசன் தலைமை தாங்கி ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ஆர். பசுபதி, நகர கழக செயலாளர் பாபு என்கிற அறிவழகன், டி. சாமிக்கண்ணு, ஆர். ரவிக்குமார் உள்ளிட்ட கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)