பாலக்கோடு, மே. 01:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர் சங்கத்தினர் உற்சாகமாக கொண்டாடினர். பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு தொழிலாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சங்கக் கொடிகளை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் கணேசன், தச்சு தொழிலாளர் சங்க தலைவர் ராஜா, இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க தலைவர் வடிவேல், கெளரவ தலைவர் சங்கர் ஆகியோர் தலைமையேற்றனர்.
நிகழ்ச்சியில் செயலாளர்கள் இடும்பன், செல்வராஜ், சரவணன், பொருளாளர்கள் சண்முகம், ரவி, முருகன், மாவட்ட தலைவர் மாதேஷ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி மே தினத்தை கொண்டாடினர். தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

