Type Here to Get Search Results !

தருமபுரியில் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மற்றும் மேசை விவரங்கள் வெளியீடு.


தருமபுரி, மே.01:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-இல் தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, வருகிற மே 4-ஆம் தேதி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) ஆகிய 5 தொகுதிகளில் மொத்தம் 83 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேசைகள் என மொத்தம் 70 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 70 மேற்பார்வையாளர்கள், 70 உதவியாளர்கள் மற்றும் 70 நுண்ணாய்வு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தபால் வாக்கு எண்ணிக்கைக்காக பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தொகுதிகளில் தலா 5 மேசைகள், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் தொகுதிகளில் தலா 6 மேசைகள் என மொத்தம் 28 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 28 மேற்பார்வையாளர்கள், 56 உதவியாளர்கள் மற்றும் 28 நுண்ணாய்வு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


வாக்கு எண்ணிக்கை மொத்தம் 23 சுற்றுகளாக நடைபெறும் என்றும், தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies