பாலக்கோடு, மே.02:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அரசு மதுபான கடையில் பணியாற்றிய தினக்கூலி தொழிலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அருகே தண்டுக்காரனஹள்ளியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில், காலி மதுபான பாட்டில்களை இறக்கும் பணிக்காக தினக்கூலி தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று லாரியிலிருந்து மதுபான பெட்டிகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சூடப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (45) என்பவர் லாரியின் மேல் ஏறி பெட்டிகளை இறக்க முயன்றபோது, கடை மேற்புறமாக தாழ்வாக சென்றிருந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை அவரது கை உரசியதால் மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)