Type Here to Get Search Results !

தருமபுரியில் FITU தொழிற்சங்கம் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது.


தருமபுரி, மே.02:


தருமபுரி மாவட்டத்தில் FITU (பெடரேஷன் ஆப் இந்தியன் டிரேட் யூனியன்) தொழிற்சங்கம் சார்பில் 140-வது உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தின பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நான்கு ரோடு ஆவின் பாலகம் அருகில் தொடங்கி, சேலம் பைபாஸ் சாலை, நாச்சியப்பன் தெரு வழியாக ராஜகோபால் பூங்கா வரை ஊர்வலமாக சென்று நிறைவுற்றது.


இந்த பேரணிக்கு FITU மாவட்ட பொறுப்பாளர் ஜி. மாதையன் தலைமை வகித்தார். இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் ஜி. பச்சாகவுண்டர் பேரணியை துவக்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற மே தின கூட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் சிறப்புரையாற்றினார். அவர் தொழிலாளர் உரிமைகள், 8 மணி நேர வேலை நடைமுறை உருவான வரலாறு மற்றும் தற்போதைய தொழிலாளர் சட்ட மாற்றங்கள் குறித்து பேசினார்.


மேலும் கூட்டத்தில் கே. ரவிச்சந்திரன், ஈ. அலமேலு, பி. ரவி, சி. பாலன், ஜி. ராஜகோபால், எம். குமார், எல்.சி. கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். இறுதியில் ஜி. சம்பத் நன்றி கூறினார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies