Type Here to Get Search Results !

வாக்கு எண்ணிக்கை பணிக்கான அலுவலர்கள் ஒதுக்கீடு; வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது.


தருமபுரி, மே.02:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 தொடர்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் (Randomization) பணியொதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் பொது பார்வையாளர்கள் டாக்டர் ஹீரா லால், திருமதி வந்தனா வைத்யா மற்றும் வாக்கு எண்ணிக்கை மைய தேர்தல் பார்வையாளர்கள் சுஷில் குமார், தரோ மைஸ் ஆகியோர் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ் முன்னிலையில் (02.05.2026) நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடத்தப்பட்டது. கடந்த 23.04.2026 அன்று நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வருகிற 04.05.2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


இதற்காக மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது, வாக்கு எண்ணும் நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.


மேலும், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.கவிதா, தேர்தல் தொடர்பான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies