Type Here to Get Search Results !

முதியோர் இல்ல தாத்தா, பாட்டிகளை திரைப்படத்திற்கு அழைத்து சென்ற மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி, மே.15:


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே எர்ரப்பட்டியில் செயல்பட்டு வரும் சேவாலயா முதியோர் இல்லத்தில் உள்ள தாத்தா, பாட்டிகளுக்கு மை தருமபுரி அமைப்பினர் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். புத்தாடைகள், உணவு உள்ளிட்ட தேவையான உதவிகளை மாதந்தோறும் வழங்கி வரும் நிலையில், முதியோர் இல்லத்தில் உள்ள தாத்தா, பாட்டிகள் ஓய்விற்காக திரைப்படம் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.


அதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடித்துள்ள “கருப்பு” திரைப்படத்தை காண தருமபுரி DMAX திரையரங்கிற்கு மை தருமபுரி அமைப்பினர் முதியவர்களை அழைத்து சென்றனர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கிற்கு வந்ததால் தாத்தா, பாட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.


இந்த நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, தன்னார்வலர்கள் மூர்த்தி, அனில்பிரகாஷ் மற்றும் சேவாலயா மேலாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதியவர்களுடன் திரைப்படம் கண்டு மகிழ்ந்தனர்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies