Type Here to Get Search Results !

ஏழ்மையில் உயிரிழந்த முதியவரின் உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள்.


தருமபுரி, மே.05:


தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி தாண்டவ உடையார் தெருவை சேர்ந்த சுப்ரமணி (78) என்பவர், உறவினர்கள் யாருமின்றி தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் வயது முதிர்வால் உயிரிழந்தார். அவரது உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் யாரும் முன்வராததால், மனிதநேயமான உதவி தேவைப்பட்ட நிலை ஏற்பட்டது.


இதையடுத்து, மாரண்டஹள்ளி காவல்துறையினர் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர், அந்த முதியவரின் உடலை தங்கள் உறவாக கருதி மை தருமபுரி அமைப்பினர் முன்னெடுத்து, பச்சையம்மன் கோயில் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.


இந்த இறுதி நிகழ்வில் மாரண்டஹள்ளி காவல் நிலைய காவலர் கிருஷ்ணன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் மற்றும் அமைப்பாளர்கள் செந்தில், கணேஷ், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மை தருமபுரி அமைப்பின் அமரர் சேவை மூலம் இதுவரை 206 ஆதரவற்ற மற்றும் ஏழ்மையில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies