தருமபுரி, மே.05:
தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 2026–2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இலக்கியம்பட்டியில் அமைந்துள்ள இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில், செவித்திறன் குறையுடைய மாணவ மாணவியர்களுக்கு 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மேலும், தங்கி கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இலவச உணவுடன் கூடிய தனித்தனி விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் திறன் அடிப்படையிலான வகுப்பறைகள் மற்றும் நவீன கணினி ஆய்வகங்களின் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக விளையாட்டு மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் தகவல்களுக்கு, தலைமை ஆசிரியர் (தொலைபேசி: 94884 73760), செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி-5 என்ற முகவரியை தொடர்புகொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்களை சேர்த்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)