மொரப்பூர், மே.13:
தமிழ்நாடு பிரைவேட் டீச்சர்ஸ் ஃபோரம் மற்றும் விஷ்வ பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான “Mega Recruitment Drive – 2026” வேலைவாய்ப்பு முகாம் தருமபுரியில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் மே 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மொரப்பூர் விஷ்வ பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
CBSE, ICSE, Matric மற்றும் Residential Schools உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்த முகாமில் பங்கேற்கின்றன. PGT, TGT, BT Assistant, Primary Teachers, Middle School Teachers, Kindergarten Teachers, PET, யோகா, இசை, கலை மற்றும் சிறப்பு கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதியவர்கள் மற்றும் அனுபவமுள்ள ஆசிரியர்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 9442614743 மற்றும் 9245633172 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)