Type Here to Get Search Results !

அதியமான் கோட்டத்தில் வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாளையும் முன்னிட்டு அரசு விழா சிறப்பாக நடைபெற்றது.


அதியமான்கோட்டை, மே. 01:


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டத்தில் சித்ரா பௌர்ணமி தினத்தையும், வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாளையும் முன்னிட்டு அரசு விழா சிறப்பாக நடைபெற்றது. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ் அவர்கள் வள்ளல் அதியமான் மற்றும் ஒளவையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இதன்போது, தமிழறிஞர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் பிறந்த நாள்களை அரசு விழாவாகக் கொண்டாடி மரியாதை செலுத்துவது தமிழ்நாடு அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். மேலும், தகடூரை (தற்போதைய தருமபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி, சங்ககாலத்தின் சிறந்த வீரரும், சிறந்த ஆட்சியாளரும் ஆவார். அவர் தமிழுக்கு செய்த பங்களிப்பும், நல்லாட்சியும் என்றும் போற்றத்தக்கது எனவும் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies