Type Here to Get Search Results !

தமிழக அரசின் நம்பிக்கை தீர்மானம்: நடுநிலை வகிப்பதாக அறிவித்தார் தருமபுரி எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி.


தருமபுரி, மே.13:


இன்று நடைபெற்ற தமிழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது பேசிய தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திருமதி சௌமியா அன்புமணி, திரு. விஜய் தலைமையிலான அரசின் நம்பிக்கை தீர்மானத்தில் நடுநிலை வகிப்பதாக தெரிவித்தார். சட்டமன்றத்தில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், விகிதாச்சார அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


மேலும், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும், பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்றும் கூறினார். அத்துடன், மாநிலத்தில் நடைபெற்று வரும் கனிமவள கொள்ளைகளை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி பேசினார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies