இன்று நடைபெற்ற திரு. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (TVK) அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு நிலைப்பாடு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. பென்னாகரம் தொகுதி தமிழக வெற்றிக் கழக (TVK) எம்.எல்.ஏ எஸ்.கே.எம். கஜேந்திரன், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
பாலக்கோடு தொகுதியை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ கே.பி. அன்பழகன், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார், அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ மரகதம் வேதிரவேல் அவர்களும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார்.
தருமபுரி தொகுதி எம்.எல்.ஏ திருமதி சௌமியா அன்புமணி, நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தார். அரூர் தொகுதியை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ வி. சம்பத்குமார், அதிமுகவின் நிலைப்பாட்டின்படி வாக்களித்ததாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தருமபுரி மாவட்ட எம்.எல்.ஏக்களின் வாக்கு நிலைப்பாடும் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.png)