தருமபுரி, மே.15:
தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19.05.2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாதமும் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மே 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை முன்வைக்கலாம் என தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி இரா. காயத்ரி தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)