Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.

=

பாலக்கோடு, மே.13:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் செயல்பட்டு வரும் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.


பாலக்கோடு வட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்து சேர்ந்து பயன்பெறுமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. சேர்க்கை முழுமையாக ஆன்லைன் முறையில் நடைபெறுவதால், மாணவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் www.tngasa.in இணையதளத்தில் பதிவு செய்து, பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உதவிட கல்லூரியில் “Help Desk” அமைக்கப்பட்டுள்ளதாகவும், 9789272765 மற்றும் 9442988208 ஆகிய எண்ணுகளில் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பொதுநிர்வாகம், சமூகப்பணி, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உளவியல், புள்ளியியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாடு, மின்னணு மற்றும் தொடர்பியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் உள்ளிட்ட பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், BCA உள்ளிட்ட சுழற்சி-II பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.


மேற்கண்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies