Type Here to Get Search Results !

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் வாழ்வியல் திறன்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.


தருமபுரி, ஏப்ரல்.14:


தருமபுரி அருகே பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆங்கிலத் துறை சார்பில் “வாழ்வியல் திறன்கள்: வாழ்வில் சிறக்க ஓர் உன்னத வழி” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சென்னை காட்டாங்குளத்தூர் SRM Institute of Science and Technology ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஹரிஹரசுதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.


அவர் தனது உரையில், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நேர மேலாண்மை, பணித் திட்டமிடல், தொடர்புத் திறன் உள்ளிட்ட வாழ்வியல் திறன்கள் மிக முக்கியமானவை என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் செல்வபாண்டியன் தலைமை வகித்தார். தொடர்ந்து, ஆங்கிலத் துறை தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளரான முனைவர் கோவிந்தராஜ், திருக்குறளில் உள்ள வாழ்வியல் மதிப்புகளை எடுத்துரைத்து துவக்க உரையாற்றினார்.


இதனைத் தொடர்ந்து, ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார். இரண்டாம் ஆண்டு மாணவி இந்துமதி வரவேற்புரை வழங்கியதுடன், சிறப்பு விருந்தினரை மாணவி புயூலா அறிமுகப்படுத்தினார். இறுதியாக முதலாம் ஆண்டு மாணவர் கவின் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் பட்ட ஆய்வாளர் மாணவர்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் சரண்யா மற்றும் மீனா ஆகியோர் மேற்கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies