தருமபுரி, ஏப்ரல். 14:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்காளர்களும் சிரமமின்றி வாக்களிக்க தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க தனி வரிசை, சக்கர நாற்காலி வசதி மற்றும் உதவிட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பார்வைத்திறன் குறைந்த வாக்காளர்கள் வாக்களிக்க உதவும் வகையில், வேட்பாளர் பட்டியல் பிரெய்லி எழுத்துக்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வழங்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை முன்கூட்டியே பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள “Saksham” மொபைல் செயலி மூலம், வாக்குச்சாவடியில் தேவையான உதவிகளை பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் விரைவாகவும் சிரமமின்றியும் வாக்களிக்கலாம்.
எனவே, அனைத்து வாக்காளர்களும் எவ்வித தூண்டுதலுக்கும் ஆட்படாமல், அச்சமின்றி, நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)