பென்னாகரம், ஏப்ரல். 28:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சந்து (அனுமதியற்ற மது) கடைகள் மீது பொதுமக்கள் திடீர் நடவடிக்கை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதிகளில் சந்து கடைகள் நீண்ட நாட்களாக இயங்கி வருவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த பலமுறை போலீசாரிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், தின்னூர் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் சந்து கடையில் மது அருந்திய பின்னர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நான்கு சந்து கடைகளையும் அடித்து உடைத்தனர். இந்த நடவடிக்கையில் பெண்கள் முன்னிலையில் செயல்பட்டனர். கடைகளை சேதப்படுத்திய போது எதிர்ப்பு தெரிவித்த சந்து கடை உரிமையாளர் கோவிந்தனை பொதுமக்கள் துரத்தி ஓட ஓட விரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவியது. சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)