Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே கள்ளச்சந்தை மது விற்பனை; 4 பேர் கைது, 84 பாட்டில்கள் பறிமுதல் - மாவட்ட காவல்துறை அறிவிப்பு.


தருமபுரி – ஏப்ரல் 28:


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் போடூர் கிராமத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, ஆள் நடமாட்டம் குறைந்த தனிமையான இடங்களிலும், பெட்டிக்கடைகளிலும் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்டவர்கள் மாதேஷ் (59), செளதாமணி (36), கோவிந்தராஜ் (48), பம்பாவாசன் (39) ஆகியோர் என போலீசார் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 84 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக பென்னாகரம் காவல் நிலையம் மற்றும் தருமபுரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையங்களில் மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.


மேலும், தருமபுரி மாவட்டம் முழுவதும் கள்ளச்சந்தை மது விற்பனையை கட்டுப்படுத்த தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies