பாலக்கோடு, ஏப்ரல். 28:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கெண்டேனஹள்ளி நெடுஞ்சாலையில் அரசு நகரப் பேருந்து மீது புளியமரம் சாய்ந்ததில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடிலிருந்து மாரண்டஹள்ளி, சந்திராபுரம், கெண்டேனஹள்ளி, சாஸ்திரமுட்லு, அத்திமுட்லு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த 22ஆம் எண் அரசு நகரப் பேருந்து, கெண்டேனஹள்ளி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையோரத்தில் இருந்த பெரிய புளியமரம் திடீரென பேருந்தின் மீது சாய்ந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்து அலறியடித்தபடி கீழே இறங்கினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலையோர மரங்களை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)