Type Here to Get Search Results !

மே தினத்தை முன்னிட்டு தருமபுரியில் மதுக்கடைகள் மூடல். – மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, ஏப்ரல். 28:


தருமபுரி மாவட்டத்தில் வரும் மே 1, 2026 (மே தினம்) முன்னிட்டு, மதுபான விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) கீழ் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், மேலும் FL-2, FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படைவீரர் மதுவிற்பனை கூடங்கள் அனைத்தும் மூடப்பட உள்ளன.


இந்த தடை 30.04.2026 இரவு 10.00 மணி முதல் 02.05.2026 நண்பகல் 12.00 மணி வரை அமலில் இருக்கும். இந்த உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.


பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சட்டம் மற்றும் ஒழுங்கை பேண உதவுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies