Type Here to Get Search Results !

மே தினத்தை முன்னிட்டு தருமபுரியில் மதுக்கடைகள் மூடல்; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


தருமபுரிம் ஏப்ரல். 30:


தருமபுரி மாவட்டத்தில் மே 1, 2026 அன்று மே தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, அனைத்து அரசு மற்றும் தனியார் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) மூலம் செயல்படும் அரசு மதுபான சில்லறை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மேலும் FL-2, FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்கள் மற்றும் முன்னாள் படைவீரர் மதுவிற்பனை கூடங்கள் அனைத்தும் 30.04.2026 இரவு 10 மணி முதல் 02.05.2026 நண்பகல் 12 மணி வரை மூடப்பட்டிருக்கும்.


இந்த காலப்பகுதியில் சந்துக்கடைகள், வீடுகள் அல்லது உணவகங்கள் வழியாக சட்டவிரோதமாக மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சட்டவிரோத மது விற்பனை குறித்து பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களில் புகார் அளிக்கலாம்:

📞 04342-231077
📞 04342-231500
📞 04342-230067
📱 WhatsApp: 89038 91077


புகைப்பட ஆதாரத்துடன் தகவல் வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies