Type Here to Get Search Results !

தருமபுரியில் “தேர்தல் மாரத்தான் 2026” - ஏப்ரல் 8ல் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளது.


தருமபுரி, ஏப்ரல். 02:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து “தேர்தல் மாரத்தான் 2026” என்ற பெயரில் மாரத்தான் ஓட்டப் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டி வருகிற 08.04.2026 காலை 6.30 மணிக்கு, தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்குகிறது.


போட்டி வழித்தடம்:

  • ஆண்கள்: மாவட்ட விளையாட்டரங்கம் → 4 ரோடு → பாரதிபுரம் → மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கம்
  • பெண்கள்: மாவட்ட விளையாட்டரங்கம் → 4 ரோடு → அரசு மருத்துவமனை → மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கம்


இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. “தேர்தல் மாரத்தான் 2026” நிகழ்ச்சியில் அதிக அளவில் பங்கேற்று, 100% வாக்குப்பதிவை உறுதிசெய்யும் விழிப்புணர்வை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies