அதியமான்கோட்டை, ஏப்ரல். 10:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதிகாலை முதலே சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று, பின்னர் அலங்கரிக்கப்பட்ட காலபைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த நிகழ்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெய்தீபம், தேங்காய் தீபம், எலுமிச்சை தீபம், பூசணிக்காய் தீபம் உள்ளிட்டவற்றை ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)