தருமபுரி – ஏப்ரல் 01:
தருமபுரி அன்னசாகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் சிவசுப்பிரமணிய திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேர் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழா கடந்த 26.03.2026 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 30.03.2026 அன்று பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு, வள்ளி–தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
31.03.2026 அன்று மாலை விநாயகர் திருத்தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வாக, வள்ளி தெய்வானை உடனாகிய சிவசுப்பிரமணியர் மகாரத்தில் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு வடம் பிடித்து திருத்தேரை நிலைபெயர்த்தனர் என்பது சிறப்பம்சமாக அமைந்தது. இந்த திருத்தேர் திருவிழாவில் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்காக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

